ரூ. 3.5 கோடியில் வில்லிப்பாக்கம் சாலை விரிவாக்கம்

செய்யூர்:செய்யூர் அடுத்த நல்லுார் பகுதியில் இருந்து வெடால் வழியாக வில்லிப்பாக்கம் செல்லும் 16 கி.மீ., நீள தார் சாலை உள்ளது. சாலை மாநில நெடுஞ்சாலைத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இச்சாலையை தையலங்காடு, ஒத்திவிளாகம், சூரக்குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சாலையில் பள்ளி குழந்தைகள், விவசாயிகள், பொதுமக்கள் என தினசரி ஏராளமானோர் கடந்து செல்கின்றனர். சாலை 3.75 மீட்டர் அகலம் கொண்ட ஒரு வழிப்பாதையாக இருந்து வந்தது.

இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் மோதிக்கொண்டு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. வளைவுப்பகுதிகளில் வாகனங்கள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

சாலை விரிவாக்கம் செய்யவேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் 3.5 கோடி மதிப்பில் வில்லிப்பாக்கத்தில் இருந்து கடுக்கலுார் வரை 3.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3.75 மீட்டர் அகலம் உள்ள சாலையை 1.75 மீட்டர் கூடுதலாக அகலப்படுத்தி 5.5 அகலமாக மாற்றி ஒருவழிப்பாதையை இருவழிப்பாதையாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்து தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டு சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது.

Advertisement