குளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த வெள்ளகுளத்தில், பொன்னேரி - தேவதானம் சாலையை ஒட்டி வளைவு பகுதியில் பொது குளம் அமைந்துள்ளது. குளத்தின் சாலையோர பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
இந்த வழியாக செல்லும் பள்ளி பேருந்து, தனியார் தொழிற்சாலை பேருந்துகள், தேவதானம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது.
எனவே, குளத்தையொட்டி உள்ள சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கவும், ஒளிரும் ரிப்ளக்டர்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் நாட்டின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும்
-
கோவில் விழாவில் மார்க்சிஸ்ட் கொடி: விசாரணைக்கு தேவசம் போர்டு உத்தரவு
-
நவக்கிரக கோவில்களை புனரமைக்க ரூ.30 கோடி நிதி
-
கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.17,000 கோடி பயிர்க்கடன்
-
வேளாண் பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்
-
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மகளிருக்கு நிதி
Advertisement
Advertisement