ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை அதிகத்துார் பகுதிவாசிகள் அவதி

அதிகத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி, மணவாளநகர் பகுதியில் இருந்து அதிகத்துார் வழியாக கடம்பத்துார் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி அதிகத்துார் மற்றும் சுற்றிள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடம்பத்துார், தண்டலம் சென்று வருகின்றனர்.
இச்சாலை கற்கள் பெயர்ந்து, மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சாலையை சீரமைக்க கோரி, பலமுறை ஒன்றிய நிர்வாகத்திடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement