துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க வந்தோருக்கு வரவேற்பு

திருத்தணி:சென்னை வண்டலுார் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் துறை பயிற்சி கல்லுாரியில், வரும் 17 - 22ம் தேதி வரை அகில இந்திய அளவில், மத்திய ஆயுதமேந்திய காவல் படை (சி.ஏ.பி.எப்.,), மாநில காவல் படை, தேசிய ஆயுதப்படை (என்.ஏ.ஜி.,), ஆயுதமேந்திய எல்லை பாதுகாப்பு படை (எஸ்.எஸ்.பி.,), மாநில காவல் படை உட்பட, 25க்கும் மேற்பட்ட காவல்படை வீரர்கள் பங்கேற்கும் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற உள்ளது.

இப்போட்டியில், நாடு முழுதும் உள்ள அனைத்து துறை காவல் படை வீரர்கள் ரயில் வாயிலாக சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில், அசாம் மாநிலத்தில் இருந்து மத்திய ஆயுதமேந்திய காவல் படை வீரர்கள் 29 பேரும், பீகார் மாநிலத்தில் இருந்து மாநில காவல் படை வீரர்கள், 21 பேரும், நேற்று நண்பகல், 11:00 மணிக்கு, பாட்னா விரைவு ரயில் வாயிலாக, திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்தனர்.

அப்போது, அரக்கோணம் ரயில்வே போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப்., போலீசார் இரு மாநில வீரர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின், மூன்று வேன்கள் வாயிலாக ஊனமாஞ்சேரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Advertisement