வக்கீலை வெட்டிய வாலிபர் கைது
திருச்சி:திருச்சியில், வழக்கறிஞர் ஒருவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முஹமது ஜாபர் அலி, 42; வழக்கறிஞர். இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். பாலக்கரை அருகே சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த பெண் ஒருவரை, ஜாபர் அலி இரண்டாவது திருமணம் செய்தார்.
சில ஆண்டுகளில், அவரை பிரிந்த அந்தப் பெண், வேறொருவரை திருமணம் செய்தார். இருப்பினும், ஜாபர் அலி அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தவர் பிரிந்து சென்றார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் சகோதரர் இம்ரான், 22, என்பவர், நேற்று முன்தினம் இரவு, கீழப்புதூர் சாலையில் டூ வீலரில் சென்று கொண்டிருந்த ஜாபர் அலியை வழி மறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் தொடர்பாக, பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து, நேற்று, இம்ரானை கைது செய்தனர்.
மேலும்
-
நவக்கிரக கோவில்களை புனரமைக்க ரூ.30 கோடி நிதி..
-
பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம்? சென்னையில் 28ல் 'தினமலர் - வழிகாட்டி'
-
புதிய கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் நாட்டின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும்
-
கோவில் விழாவில் மார்க்சிஸ்ட் கொடி: விசாரணைக்கு தேவசம் போர்டு உத்தரவு
-
கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.17,000 கோடி பயிர்க்கடன்
-
வேளாண் பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்