கிரிக்கெட் விளையாடியவர் கொலையா?

மைசூரு: கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக, வாலிபர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கன்றனர்.

மைசூரு எச்.டி., கோட்டேவை சேர்ந்தவர் திவ்யா குமார், 31. இவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார். கடந்த மாதம் 24ம் தேதி நடந்த போட்டியில் ஜே.பி., வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார்.

ஒரு போட்டியில், இவரது அணி தோல்வி அடையும் நிலையில் இருந்தது. அப்போது, இவர் 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். இந்த சந்தோஷத்தில் வீட்டுக்கு சென்றார். வழியில் சாலையோரத்தில் விழுந்து கிடந்தார்.

இதை பார்த்த சிலர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த 20 நாட்களாக, கோமா நிலையில் இருந்தார். இந்நிலையில், நேற்று உயிரிழந்தார்.

இவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக எச்.டி., கோட்டே போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் செய்தனர். விளையாட்டு முன்விரோதம் காரணமாகவே, யாரோ சிலர் தாக்கி சாலையோரத்தில் போட்டு இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement