அங்கக இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி

மதுரை; மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை சார்பில் மாணவர்களுக்கு அங்கக இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. துறைத்தலைவர் ராகவன் வரவேற்றார். முதல்வர் மகேந்திரன் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.


இயற்கை விவசாயத்திற்கு மாடுகளின் முக்கியத்துவம், கிடைபோடுதல் குறித்து தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி சுரேஷ்கண்ணன், அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து உற்பத்தியாளர்கள் கவின்ராஜ், மார்த்தாண்டம் பேசினர். மண்ணியியல் துறை இணைப்பேராசிரியர் பிரபாகரன், நோயியல் துறை பேராசிரியர் மாரீஸ்வரி, பூச்சியியல் துறை இணைப்பேராசிரியை உஷாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement