கடையில் திருட்டு

பேரையூர்; டி.கல்லுப்பட்டி ராம்நகர் ஜெய்சங்கர் 54. இவர் அதே ஊரில் மாரியம்மன் கோயில் எதிர்புறம் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு நேற்று காலை கடையை திறக்க வந்த போது, மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த 25 ஆயிரம் ரூபாயை திருடி சென்றிருப்பது தெரியவந்ததை அடுத்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement