தேரோட்டம்

மேலுார்; அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. தேரில் விநாயகர் ஒரு தேரிலும், வல்லடிகாரர், பூரணி மற்றும் பொற்கலை அம்பாள் மற்றொரு தேரிலும் கோயிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

வெள்ளலுார் நாட்டைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.

Advertisement