டீசல் திருடியதாக டிரைவர் மீது தாக்கு
குஜிலியம்பாறை; ஆலம்பாடி சி.சி. குவாரியை சேர்ந்தவர் லாரி டிரைவர் ரமேஷ் 32. ஜி.எஸ்., இன்ப்ராடெக் கான்ட்ராக்ட் கம்பெனியில் பொலிரோ பிக் அப் வண்டி மூலம் டீசல் போடும் வேலை செய்து வந்தார். பணி முடிந்து குஜிலியம்பாறை மனமகிழ் மன்றத்திற்கு வந்த அவரை உரிமையாளர்கள் சந்தோஷ், கோபிநாத், மேலாளர் மனோஜ் , ஊழியர்கள் முருகேசன், லட்சுமணன் ஆகியோர் கம்பெனிக்கு காரில் அழைத்து சென்றனர்.
அங்கு சென்றதும் எத்தனை நாளாக டீசல் திருடினாய் என கூறி ரமேஷை தாக்கினர். அலைபேசியை வாங்கி கொண்டு கரூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாக்கிய 5 பேர் மீது குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஷ்கர் பயங்கரவாதி அபுகுத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
-
ஏ.ஆர்.ரஹ்மான் உடல் நலம் ; முதல்வர் ஸ்டாலின் விசாரிப்பு
-
20 ஆண்டுகள் சிவகங்கையில் கொத்தடிமை வாழ்க்கை; மகளைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை
-
அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி
-
வளர்ச்சியை நோக்கி இந்தியா, சீனா; உலக நாடுகளில் பொருளாதார பின்னடைவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அறிக்கை
-
டிராக்டர் மோதி வாலிபர் பலி
Advertisement
Advertisement