பண்டிகையில் காமன் தகனம்

சின்னாளபட்டி; சின்னாளபட்டி கடைவீதி காமய (காமன்) சுவாமி கோயில் திருவிழா மார்ச் 1ல் துவங்கியது.

பிறை தரிசனத்தை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு தினம் ஒரு கட்டளைதாரர் வீதம் 15 நாட்களுக்கு வழிபாடு நடந்தது.

நேற்று முன்தினம் காமன் தகன விழா நடந்தது. ஏராளமானோர் உப்பு, மிளகு செலுத்தி வழிபாடு செய்தனர்.

ஏற்பாடுகளை விழா குழு தலைவர் சிவமுருகேசன், செயலாளர் ராஜா, பொருளாளர் பொன்ராஜ் செய்திருந்தனர்.

Advertisement