நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பையால் சுற்றுச்சூழல் பாதிப்பு! நிலத்தடி நீருக்கும் வேட்டு வைக்கும் மக்கள்

மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்நிலைகள் அதிகமாக உள்ளன. குளம், கண்மாய்களில் முறையின்றி தொடர்ச்சியாக குப்பை, கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இவற்றில் இருந்து மக்கும், மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்தெடுப்பதில்லை.
கழிவுகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக உள்ளன. பல இடங்களில் குப்பை பிரித்தெடுக்கப்படாமல் அந்த இடத்திலேயே தீ வைத்தும் எரிக்கப்படுகிறது.
இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அருகில் குடியிருப்பவர்கள், அந்தப் பகுதியை கடந்து செல்பவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பை காற்றில் பறந்து அருகிலுள்ள பகுதி முழுவதும் பரவுகிறது. மழை பெய்யும் போது இப்பகுதிகளை கடந்து செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.
நீர் நிலைகளில் கொட்டப்படும் குப்பை நிலத்தடி நீர்மட்டத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை முறையாக செயல்படுத்தி நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !