ஒரே நாடு ஒரே தேர்தலை வலியுறுத்தி பேச்சுப்போட்டி; தமிழகத்தில் 15 மண்டலங்களில் மத்திய அரசு ஏற்பாடு

காரைக்குடி; ''ஒரே நாடு ஒரே தேர்தல், வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு ஒரே வழி'' என்ற தலைப்பில் தமிழகத்தில் மார்ச் 17 முதல் 23 வரை மண்டல அளவிலான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக, மத்திய அரசு இளைஞர் நலத்துறை மை பாரத் (நேரு யுவ கேந்திரா) மாநில இயக்குனர் எஸ். செந்தில்குமார் தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் தெரிவித்ததாவது: பார்லிமென்ட்டில் இளைஞர்களின் குரல் ஒலிப்பதற்காக மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மை பாரத் சார்பில் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த ஆண்டு தேசிய இளையோர் பாராளுமன்ற திருவிழா 'வளர்ச்சியடைந்த பாரத இளையோர் நாடாளுமன்றம்' என்ற பெயரில் நடைபெறுகிறது.
இளைஞர்களின் வேறுபட்ட கருத்தையும்,ஆக்கபூர்வமான அறிவாற்றலையும் கொண்டு சேர்க்கும் விதமாக இளையோர் பாராளுமன்ற திருவிழா நடைபெறுகிறது. மாநில அளவில் முதலிடம் பிடித்தவர் பாராளுமன்ற திருவிழாவில் உரையாட முடியும். 2 மற்றும் 3 இடம் பிடித்தவர்கள் கலந்து கொள்ள மட்டுமே முடியும்.
18 வயது முதல் 25 வயது உடையவர்கள் போட்டியில் கலந்து கொள்ளலாம். மண்டல அளவிலான போட்டியில் ஒரு நிமிட வீடியோவை மை பாரத் ஆன்லைன் தளத்தில் (mybharat.gov.in) பதிவு செய்ய வேண்டும். வீடியோவிற்கான தலைப்பு 'வளர்ச்சி அடைந்த பாரதம்'. வீடியோவை மை பாரத் தளத்தில் பதிவு செய்த பின் தமிழகத்தில் 15 மண்டலங்களில் நடக்கும் போட்டியில் பங்கு பெற அழைப்பு விடப்படும். 15 மண்டலங்களில் அதிகபட்சமாக 150 பேர் பங்கேற்பர்.
இதற்கான தலைப்பு 'ஒரே நாடு ஒரே தேர்தல் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு ஒரே வழி என்பதாகும். மார்ச் 17 முதல் 23 வரை மண்டல அளவிலான பேச்சு போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெறும். மண்டலத்தில் தேர்ச்சி பெற்ற 10 பேர் மாநில போட்டியில் கலந்து கொள்வர். மாநில போட்டி சென்னை லயோலா கல்லூரியில் மார்ச் 25, 26ல் நடைபெறும்.
மாநில போட்டியில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 1 மற்றும் 2 தேதியில் டில்லியில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கு பெறுவர். தேசிய அளவிலான தலைப்பு ''ஒரு தேசம் ஒரு தேர்தல், ஜனநாயகத்தை எளிமைப்படுத்துதல், முன்னேற்றத்தை பெருக்குதல், நிலைத்தன்மையை உறுதி செய்தல்'' என்பதாகும். தமிழ், ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழிகளில் பேசலாம். பதிவு செய்ய இன்றே கடைசி. இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் என்றார்.
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !