ஐகோர்ட் நீதிபதி முதல்வர் சந்திப்பு

புதுச்சேரி; புதுச்சேரியில் பிணக்கு தீர்வு நடுவர் மையம் அமைக்க இடம் கோரி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, சட்டசபையில் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்தார்.

சந்திப்பின் போது, புதுச்சேரியில் பிணக்கு தீர்வு நடுவர் மையம் அமைப்பதற்கான கட்டடம் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார். அப்போது சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement