இளையராஜாவுக்கு பாராட்டு விழா; புதுச்சேரியில் நடத்த ஏற்பாடு

புதுச்சேரி; லண்டன் இசை நிகழ்ச்சியில் சிம்பொனி இசை அமைத்து சாதனை படைத்த இளையராஜவை, அசோக்பாபு எம்.எல்.ஏ., சந்தித்து நினைவு பரிசு வழங்கினார்.

இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிம்பொனி இசை அமைத்து சாதனைபடைத்தார். இதையடுத்து சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் இளையராஜாவை அசோக்பாபு எம்.எல்.ஏ., நேற்று சந்தித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் நடக்கும் பாராட்டு விழா கலந்து கொள்ளும்படி கோரிக்கை வைத்தார். அதற்கு இளையராஜா கலந்து கொள்வதாக தெரிவித்தார். புதுச்சேரி பா.ஜ., விவசாய அணி முன்னாள் தலைவர் புகழேந்தி, விவசாய அணி மாநில செயலாளர் முத்து, விவசாய அணி மாவட்டத் தலைவர் ஹரி, நிர்வாகிகள் ரஞ்சித், விஜயரங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Advertisement