நுால் வெளியீட்டு விழா

புதுச்சேரி; புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில், ராமச்சந்திரன் எழுதிய 'காலத்தை பாடிய கவி' நுால் வெளியீட்டு விழா புதுவை தமிழ்சங்கத்தில் நடந்தது.

உமா அமர்நாத் தலைமை தாங்கினார். கலியமூர்த்தி மணி ரத்தினம் வரவேற்றார். புதுவை தமிழ்சங்க தலைவர் முத்து நுாலை வெளியிட, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர், எழுத்தாளரர் ஆதவன் தீட்சண்யா பெற்றுக் கொண்டார்.

பாவலர் பாலசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார். இளங்கோ அறிமுக உரையாற்றினார். பச்சையம்மாள் தொகுத்து வழங்கினார். எழுத்தாளர் ராமச்சந்திரன் ஏற்புரை வழங்கினார். விழாவில், மதுமிதா, செல்வம், சுகண்யா, சண்முகசுந்தரம், சிவக்குமார், பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.

ரமேஷ் பைரவி நன்றி கூறினார்.

Advertisement