எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்!

தூத்துக்குடி: எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான நாறும்பூநாதன் காலமானார். இவருக்கு வயது 66.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கழுமலையை சேர்ந்தவர் நாறும்பூநாதன், 66. இவர் கோவில்பட்டியில் ஜி.வி.என் கல்லூரியில் படித்தார். இவர் திருநெல்வேலியில் ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட செயலாளராக பதவி வகித்துள்ளார்.
இவர், எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இவர் சிறுகதைகள், கட்டுரைகள் என பல்வேறு நூல்களை எழுதி உள்ளார்.
இவரது மனைவி உஷா திருநெல்வேலியில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். திருநெல்வேலியில் பொருநை புத்தக கண்காட்சி நடந்த போது, நாறும்பூநாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் பின்னர் அவர் வீட்டில் ஓய்வு இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 16) காலை அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும்
-
பாகிஸ்தானில் பஸ்சில் குண்டுவெடிப்பு; பாதுகாப்பு படையினர் 90 பேர் பரிதாப பலி
-
தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்குங்க; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
தொடரும் அரிய வகை குரங்குகள் கடத்தல்: தடுக்க இந்தியா - மலேசியா பேச்சு!
-
வாட்ஸ்அப்பில் கலக்கல் அப்டேட்; ஒரே இடத்தில் இன்ஸ்டா, பேஸ்புக் இயக்க முடியும்!
-
மஹா பெரியவர் மகிமை பேசும் ‛நம்ப ஆத்து பெரியவா'
-
மொழிபெயர்ப்பு சாத்தியமானது எப்படி: சாகித்ய அகாடமி விருதாளர் விமலா