பாகிஸ்தானில் பஸ்சில் குண்டுவெடிப்பு; பாதுகாப்பு படையினர் 90 பேர் பரிதாப பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் சென்ற பஸ்சில் குண்டு வெடித்ததில்,90 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். பலூசிஸ்தான் விடுதலை படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள நுஷ்கி என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த பஸ்சில் குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே, 90 பேர் உயிரிழந்தனர். மேலும் பல பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்' என கூறியுள்ளார்.
பலூசிஸ்தான் விடுதலை படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. சமீபத்தில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணியரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர்.
அதன்பிறகு, பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று விட்டு, மக்களை அந்நாட்டு ராணுவத்தினர் மீட்டனர். இந்த சம்பவம் நடந்து பரபரப்பு ஓயவில்லை. அதற்குள் தற்போது மீண்டும் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
வாசகர் கருத்து (37)
kulandai kannan - ,
16 மார்,2025 - 21:50 Report Abuse

0
0
Reply
காஷ்மீர் கவுல் பிராமணன்.ஷோபியன். - ,
16 மார்,2025 - 20:54 Report Abuse

0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
16 மார்,2025 - 20:48 Report Abuse

0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
16 மார்,2025 - 20:31 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16 மார்,2025 - 20:27 Report Abuse

0
0
Reply
Karthik - ,இந்தியா
16 மார்,2025 - 20:19 Report Abuse

0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
16 மார்,2025 - 20:13 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
16 மார்,2025 - 19:29 Report Abuse

0
0
செல்வேந்திரன்,அரியலூர் - ,
16 மார்,2025 - 20:04Report Abuse

0
0
Reply
Jay - Bhavani,இந்தியா
16 மார்,2025 - 18:50 Report Abuse

0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
16 மார்,2025 - 18:43 Report Abuse

0
0
SUBBU,MADURAI - ,
16 மார்,2025 - 19:56Report Abuse

0
0
Reply
மேலும் 25 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement