இந்தியாவுக்கு 33 பதக்கம்: குளிர்கால ஸ்பெஷல் ஒலிம்பிக்கில்

டுரின்: ஸ்பெஷல் ஒலிம்பிக் குளிர்கால விளையாட்டில் இந்தியாவுக்கு 8 தங்கம் உட்பட 33 பதக்கம் கிடைத்தது.
இத்தாலியில், அறிவுசார் குறைபாடுள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடந்தது. இதன் கடைசி நாளில் நடந்த பெண்களுக்கான புளோர்பால் (8 பேர்) 3-4வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, டிரினிடாட் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்திய அணி 10-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
பெண்களுக்கான 'கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங்' 100 மீ.,-கிளாசிகல் டெக்னிக்-'எப்-2' பிரிவு பைனலில் இந்தியாவின் அக்ரிதி, வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான 'ஸ்னோஷூயிங்'-25 மீ.,-'எம்-04' பிரிவு பைனலில் இந்தியாவின் வாசு திவாரி 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீரர் ஜஹாங்கிர் வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இப்பிரிவில் இந்திய வீராங்கனைகளான ஷாலினி சவுகான், தன்யா வெள்ளி வென்றனர்.
கடைசி நாளில் இந்தியாவுக்கு 3 வெள்ளி, 6 வெண்கலம் என, 9 பதக்கம் கிடைத்தது. இத்தொடரில் அசத்திய இந்திய நட்சத்திரங்கள், 8 தங்கம், 18 வெள்ளி, 7 வெண்கலம் என, மொத்தம் 33 பதக்கம் வென்றனர். இதில் 'ஸ்னோஷுயிங்', 'ஆல்பைன் ஸ்கீயிங்' தலா 10, 'ஸ்னோபோர்டிங்' 6, 'ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங்' 4, 'கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங்' 2, 'புளோர்பால்' போட்டியில் ஒரு பதக்கம் கிடைத்தது.
மேலும்
-
குடும்பத்துடன் நேரம்...கோலி ஆர்வம்
-
சச்சின் அணி சாம்பியன்: மாஸ்டர்ஸ் லீக் தொடரில் அசத்தல்
-
இஸ்ரேலில் ஹோலி கொண்டாட்டம்: 3 ஆயிரம் பேர் பங்கேற்பு
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்; சீமான் கேள்வி
-
அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல்; பிரதமர் மோடிக்காக டிரம்ப் எடுத்த ரிஸ்க்
-
*மண்டலங்களில் ஒருங்கிணைப்பின்றி சுகாதார அதிகாரிகள்...முறைகேடு? *கட்டடங்களை ஆய்வு செய்யாமல் சான்றளிப்பதாக சர்ச்சை