லாண்டோ நோரிஸ் 'சாம்பியன்': ஆஸ்திரேலிய 'பார்முலா-1' கார்பந்தயத்தில்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய 'பார்முலா-1' கார்பந்தயத்தில் 'மெக்லாரன் மெர்சிடஸ்' அணியின் லாண்டோ நோரிஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
நடப்பு ஆண்டுக்கான 'பார்முலா-1' கார்பந்தய உலக சாம்பியன்ஷிப் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. முதல் சுற்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்தது. நேற்று, 'பைனல் ரேஸ்' நடந்தது. பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 42 நிமிடம், 06.304 வினாடியில் கடந்த 'மெக்லாரன் மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் லாண்டோ நோரிஸ், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
நடப்பு உலக சாம்பியன், 'ரெட் புல் ரேசிங் ஹோண்டா' அணியின் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 2வது இடம் பிடித்தார். 'மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் ஜார்ஜ் ரசல் 3வது இடத்தை தட்டிச் சென்றார். 'பெராரி' அணிக்காக முதன்முறையாக களமிறங்கிய, 7 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் 10வது இடம் பிடித்தார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய 'பார்முலா-1' போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற 'வில்லியம்ஸ் மெர்சிடஸ்' அணியின் ஸ்பெயினின் வீரர் கார்லஸ் சைன்ஸ், பந்தயத்தை முழுமையாக முடிக்கவில்லை.
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை