ஆட்டோ - கார் மோதல் இருவர் படுகாயம்

திருத்தணி:திருத்தணி, அக்கைய்யநாயுடு சாலையைச் சேர்ந்தவர் முகமது யூசப் மகன் அப்துல் மதின், 45. இவரது நண்பர் சாய்ஜின்னா, 45. இருவரும் நேற்று, ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றி கொண்டு, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சீனிவாசபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே வந்த 'டொயோட்டா எத்தேஷ்' என்ற கார் மோதியது. இதில், ஆட்டோவில் வந்த இருவரும் படுகாயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேல்சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement