மாடு குறுக்கே வந்ததால் விபத்து பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

மப்பேடு:ஒடிசா மாநிலம் கஞ்சாம் பகுதியைச் சேர்ந்தவர் ஷிபா டகுவா, 33. இவர், குடும்பத்தினருடன் மப்பேடு அடுத்த விஸ்வநாதபுரத்தில் தங்கி, மப்பேடில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 14ம் தேதி பொருட்கள் வாங்க 'ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மாடு குறுக்கே வந்ததால், சாலையோர மின்கம்பத்தில் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த மப்பேடு போலீசார், உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இவரது மனைவி பர்திமா டகுவா அளித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement