வடமாநில வாலிபர் மயங்கி விழுந்து பலி

திருவள்ளூர்:ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷேக் அப்தாப் அலாம், 43. இவர், உறவினர்களுடன் திருவள்ளூரில் தங்கி உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 14ம் தேதி இரவு பணி முடிந்து தனது அறைக்கு வந்துள்ளார். அன்று ஹோலி பண்டிகை என்பதால், அறையில் உள்ள அனைவரும் ஒருவர் மீது ஒருவர் சாயம் பூசி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 1:30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார்.

அருகிலிருந்தோர் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement