மாயமான வாலிபர் சடலமாக மீட்பு
திருத்தணி:பள்ளிப்பட்டு தாலுகா நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் சூர்யா, 25. இவருக்கும் புச்சிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நிரோஷா என்பவருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
கடந்த வாரம் மனைவியின் சகோதரர் நரசிம்மன் என்பவரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக, சூர்யா குடும்பத்துடன் புச்சிரெட்டிபள்ளிக்கு வந்துள்ளார். திருமணம் முடிந்த நிலையில், கடந்த 11ம் தேதி மாலை உறவினரை பேருந்து ஏற்றுவதற்காக சென்ற சூர்யா வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று மதியம் புச்சிரெட்டிப்பள்ளி மலையில் உள்ள சிவன் கோவில் செல்லும் மலைப்பாதையில், சூர்யா சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்ட பகுதிவாசிகள், திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !