பஸ் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் பலி

செம்மஞ்சேரி:தாழம்பூர், அண்ணாதெருவை சேர்ந்தவர் அன்பு, 25. ஓ.எம்.ஆரில் உள்ள பைக் ஷோரூமில் பணிபுரிந்தார். செம்மஞ்சேரி சுனாமி நகரை சேர்ந்த பிரகாஷ், 28, சுரேஷ், 25. நேற்று காலை, மூன்று பேரும் ஹோண்டா டியோ பைக்கில் நாவலுாரில் இருந்து சோழிங்கநல்லுார் சென்றனர். சுரேஷ் ஓட்டி சென்றார்.

ஓ.எம்.ஆர்., குமரன் நகர் சந்திப்பை கடந்து செல்லும்போது, பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியதில், மெட்ரோ ரயில் பணிக்காக வைத்திருந்த தடுப்பில் பைக் உரசியது. இதில் நிலை தடுமாறிய அன்பு சாலையில் விழுந்த போது, பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியானார்.

பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், பேருந்து ஓட்டுநர் திருவல்லிக்கேணியை சேர்ந்த தம்பிதுரை, 54, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement