ஹோட்டல் நிர்வாக படிப்பு 'தாட்கோ'வில் ஏற்பாடு
சென்னை:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகமான 'தாட்கோ' சார்பில், பல்வேறு திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
அந்தவகையில், பிளஸ் - 2 முடித்த, ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு, பி.எஸ்.சி., முழு நேர பட்டப்படிப்பு; பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு, ஹோட்டல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட படிப்புகளில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தரமணியிலுள்ள இன்ஸ்டிடியூ ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனம் வாயிலாக, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. படிப்பிற்காக செலவை தாட்கோ ஏற்கும்.
படிப்பை முடித்ததும், திறமை அடிப்படையில், விமானம் மற்றும் கப்பல் உள்ளிட்ட துறைகளில் பணிபுரிய வழிவகை செய்யப்படும். பயிற்சியில் சேர, www.tahdco.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
Advertisement
Advertisement