மும்பை அணி ஆதிக்கம்: 'டி-20' லீக் தொடர்களில்

மும்பை: உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த 'டி-20' லீக் தொடர்களில் மும்பை அணி ஆதிக்கம் செலுத்துகிறது.
மும்பையில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) 3வது சீசனுக்கான பைனலில் மும்பை அணி (149/7), 8 ரன் வித்தியாசத்தில் டில்லியை (141/9) வீழ்த்தி, 2வது முறையாக (2023, 2025) கோப்பை வென்றது. இது, உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் 'டி-20' லீக் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்த 12வது கோப்பை ஆனது.
ஐ.பி.எல்., அரங்கில் 5 முறை (2013, 2015, 2017, 2019, 2020) கோப்பை வென்ற மும்பை அணி, சாம்பியன்ஸ் லீக் தொடரில் 2 முறை (2011, 2013) சாம்பியன் ஆனது. அமெரிக்காவில் நடக்கும் மேஜர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 2023ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த சர்வதேச லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி கோப்பை வென்றது. சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த 'எஸ்.ஏ.20' தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
மும்பை அணி பயிற்சியாளர் சார்லோட்டி எட்வர்ட்ஸ் கூறுகையில், ''150 ரன் என்ற இலக்கு எட்டக்கூடியது. டில்லி அணியின் துவக்க ஜோடியை விரைவில் வெளியேற்றியது வெற்றிக்கு உதவியது. பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அரைசதம் கடந்து கவுரவமான ஸ்கோரை பெற்றுத்தந்தார். நாட் சிவர்-புருன்ட், ஹேலி மாத்யூஸ் 'ஆல்-ரவுண்டராக' அசத்தினர்,'' என்றார்.
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !