மான் கொம்பு சிலம்பத்தில் அசத்தி சாதனை படைத்த சிறுவர் - சிறுமியர்

சென்னை:சென்னையில் இயங்கிவரும் சுவாமி விவேகானந்தா அனைத்து விளையாட்டு இளைஞர் சங்கம் மற்றும் சுவாமி விவேகானந்தா சிலம்பக்கூடம் இணைந்து, நோபல் உலக சாதனைக்காக, தொடர்ந்து 60 நிமிடங்கள், சிலம்பத்தில் மான் கொம்பு சுற்றும் நிகழ்ச்சியை, நேற்று காலை நடத்தியது.

ெஷனாய் நகர் பூங்காவில் நடந்த இந் நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர். காலை 8:30 மணிக்கு துவங்கிய சாதனை நிகழ்ச்சி, 9:30 மணிக்கு நிறைவுற்றது.

சிறப்பு விருந்தினர்களாக 'வேம்பு' திரைப்பட நடிகர் ஹரிகிருஷ்ணன் மற்றும் நடிகை ஷீலா ராஜ்குமார் வருகை தந்து, சாதனை புரிந்த மாணவ - மாணவியருக்கு சான்றிதழ், கோப்பை வழங்கி பாராட்டினர்.

'இந்நிகழ்ச்சி தமிழர்களின் வீரக் கலையான சிலம்பத்தை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்பட்டது' என, விவேகானந்தா விளையாட்டு இளைஞர் சங்க செயலர் ஏழுமலை, தலைவர் வின்னரசி ஆகியோர் தெரிவித்தனர்.

Advertisement