திரவுபதி அம்மன் கோவிலில் குண்டம் விழா கோலாகலம்

பொள்ளாச்சி; ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், பக்தர்கள் பலர், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆனைமலையில் உள்ள, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த மாதம், 27ம் தேதி கொடியேற்றத்துடன் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா துவங்கியது.
தொடர்ந்து, தர்மராஜா, திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், கண்ணபிரான் துாது, சாமி புறப்பாடு, குண்டத்துக் காட்டில் விஸ்வரூப தரிசனம், அம்மன் ஆபரணம் பூணுதல், அரவான் சிரசு, குண்டம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நேற்று குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. விரதம் இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' கோஷமிட்டு, குண்டம் இறங்கி, நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தவிர, 5 அடி முதல் 10 அடி நீளம் கொண்ட அலகு குத்தியும், பக்தர்கள் குண்டம் இறங்கி, பரவசமடைந்தனர். தொடர்ந்து, தேர் ஊர்வலமும் நடைபெற்றது.
அறங்காவலர் செந்தில்வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று தேர் நிலைநிறுத்துதுல், ஊஞ்சல் பட்டாபிேஷகம் நிகழ்ச்சியும், நாளை மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு நிகழ்ச்சியும் நடக்கிறது.
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !