கற்பனை வேண்டாமே!

'பதவி காலியாவதற்கு முன், இடத்தை பிடிப்பதற்கு துண்டு போடத் துவங்கி விட்டனரே...' என, வருத்தப்படுகிறார், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
கேரளாவில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக இப்போதே அங்குள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
தொடர்ச்சியாக, 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் காங்கிரஸ் தொண்டர்கள் சோர்வுஅடைந்துள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்குவதற்காக, அந்த கட்சியின் தலைவர்கள் ராகுலும், பிரியங்காவும் அடிக்கடி கேரளாவுக்கு வந்து செல்கின்றனர்.
ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தரப்பிலோ, தேர்தலுக்கு தயாராவதை விட, தேர்தலில் வெற்றி பெற்றால் முதல்வராவது யார் என்பதில் தான் கடுமையான போட்டி நிலவுகிறது.
'பினராயி விஜயனுக்கு, 79 வயதாகி விட்டது. அவர், 10 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்து விட்டார். அவருக்கு பதிலாக வேறு ஒரு மூத்த தலைவருக்கு முதல்வர் பதவியை தர வேண்டும்...' என, இப்போதே, பினராயி அதிருப்தி கோஷ்டியினர் கொடி பிடிக்கத் துவங்கியுள்ளனர்.
கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் கோவிந்தன் உட்பட அரை டஜன் தலைவர்கள் முதல்வர் பதவிக்காக முட்டி மோதத் துவங்கி உள்ளனர்.
பினராயி விஜயன் ஆதரவாளர்களோ, 'முதலில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கான வேலையை பார்க்காமல், இப்போதே கற்பனையில் மிதக்கின்றனர். இதைப் பார்த்தால் அழுவதா, சிரிப்பதா என தெரியவில்லை...' என, கிண்டலடிக்கின்றனர்.
மேலும்
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
-
சென்னை-மும்பை ஐ பி.எல்., கிரிக்கெட் போட்டி: ரசிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
-
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி