அகிலாண்டேஸ்வரி கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

உடுமலை; உடுமலை அகிலாண்டேஸ்வரி அம்பாள் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட்டில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் சோழீஸ்வரசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.

சிறப்பு வழிபாட்டுடன் காலையில் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement