துாய்மை பணியாளர் ஊதியம் ரூ.15,000 வழங்க கோரிக்கை
சேலம்: சேலத்தில், அரசு பொது சுகாதாரத் துறையின், துப்புரவு மற்றும் மஸ்துார் அரசு பணியாளர் நலச்சங்க கூட்டம் நேற்று நடந்தது. மாநில நிர்வாக தலைவர் வெங்கடா-சலம் தலைமை வகித்தார்.
அதில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு, ஆர்.சி.எச்., பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்தல்; கிராமப்புற ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு, துாய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும், 5,000 ரூபாய் ஊதியத்தை, 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன.
முன்னதாக, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சேலம் மாவட்ட தலைவர் செல்வகுமார் பேசினார். மாநில பொருளாளர் ஆனந்தி, மாநில பொறுப்பாளர் ரத்தினம் உள்பட பலர் பங்கேற்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
Advertisement
Advertisement