பசுவால் விபத்து பைக்கில் சென்றவர் பலி
திருவள்ளூர்: ஒடிசா மாநிலம், கஞ்சாம் பகுதியைச் சேர்ந்தவர் ஷிபா டகுவா, 33. இவர், குடும்பத்தினருடன், திருவள்ளூர் மாவட்டம், விஸ்வநாதபுரத்தில் தங்கி, மப்பேடில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 14ம் தேதி பொருட்கள் வாங்க 'ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மாடு குறுக்கே வந்ததால், சாலையோர மின்கம்பத்தில் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
-
சென்னை-மும்பை ஐ பி.எல்., கிரிக்கெட் போட்டி: ரசிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
Advertisement
Advertisement