ரூ.2.50 லட்சம் புகையிலை பறிமுதல்




சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை போலீசார், அங்குள்ள குப்புத்தெ-ருவில் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஹரீஷ், 35, என்பவரை கைது செய்து, 2.41 லட்சம் ரூபாய் மதிப்பில், 302 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் கன்னங்குறிச்சி பெருமாள் கோவில் தெருவில் புகையிலை விற்ற, திருநாவுக்கரசு, 44 என்பவரை, கன்-னங்குறிச்சி போலீசார் கைது செய்து, 11,550 ரூபாய் மதிப்பில் புகையிலையை பறிமுதல் செய்தனர்.

Advertisement