மின்வாரிய தொழிலாளர்கள் சிதம்பரம் கோட்ட மாநாடு
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பில் மின்வாரிய தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு., சிதம்பரம் கோட்ட மாநாடு நடந்தது.
கோட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மதுசூதனன், செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ரமேஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு நிலை முகவர் சிவஞானம் கொடியேற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் வெற்றிவேல், துணைச் செயலாளர் கோவிந்தராசு வரவேற்றனர். மாவட்ட செயலாளர் தேசிங்கு துவக்கவுரையாற்றினார். கோட்ட செயலாளர் ரவிச்சந்திரன் செயல்அறிக்கை வாசித்தார்.
கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, முன்னாள் மாவட்ட தலைவர் ஆதிமூலம், பொருளாளர் ஜீவா, இணைச்செயலாளர் வடிவேலன் ஆகியோர் விவாதம் தொகுப்புரையாற்றி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். மாநில துணை பொதுச்செயலாளர் பழனிவேல் சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில், மின்வாரியத்தில் காலியாக உள்ள 62 ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். கடந்த 2023ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோட்ட செயற்குழு முருகானந்தம் நன்றி கூறினார்.
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை