திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் ஏப்.11ல் கும்பாபிஷேகம்

திருப்புத்துார் : திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பின் ஏப்.11ல் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.
திருப்புத்துார் தென் தெய்வமாக பூமாயி அம்மன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சப்த மாதர்கள்என அழைக்கப்படும் பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய அன்னை எழுவரும் மூலவர்களாக எழுந்தருளியுள்ளனர். வைஷ்ணவியே பூமாயி அம்மன் ஆக பக்தர்களால் தரிசிக்கப்படுகிறார்.
இக்கோயிலில் மூலவர் பூமாயி அம்மன் உள்ளிட்ட சப்தமாதர் சன்னதியும், பைரவர், ஆதிவிநாயகர், முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகம் ஆகிய உபசன்னதிகளும் உள்ளன. கோயில்குளம், 3 நிலை ராஜகோபுரத்துடன் உள்ளது. இக்கோயிலுக்கு மூன்று முறை கும்பாபிேஷகம் நடந்துள்ளது.
தற்போது 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. கோயில் முன் மண்டபம் துாண்கள் பராமரிப்பு, சுதை வேலைப்பாடுகள், வண்ணப்பூச்சு விநாயகர் கோயில் ஆகிய திருப்பணிகள் நடந்து வருகிறது.
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் ஏப்.7 மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தன பூஜைகளுடன் துவங்குகின்றன.
ஏப்.11அதிகாலை 5:00 மணிக்கு ஆறாம் கால யாகபூஜையும், காலை 8:30 மணிக்கு விமான,கோபுர மகா கும்பாபிேஷகமும், காலை 8:50 மணிக்கு மூலவர் மகா கும்பாபிேஷகமும், மாலை 5:00 மணிக்கு மகா அபிேஷகமும், இரவில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறும். யாகசாலை பூஜைகளை பிள்ளையார்பட்டி கே.பிச்சைக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்கின்றனர்.
ஏற்பாட்டினை முன்னாள் தக்கார் நா.ஆறு.தங்கவேலு, அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர்,தக்கார் து.பிச்சுமணி, செயல் அலுவலர் எஸ்.விநாயகம் செய்கின்றனர்.
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை