குழந்தை மீதான பாலியல் குற்றம்  தடுக்க விழிப்புணர்வு கூட்டம்   மார்ச் 26ல் பள்ளிகளில் நடக்கிறது

சிவகங்கை : பள்ளிகளில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்தல் குறித்து ஆலோசிக்க மார்ச் 26 ல் பள்ளிகளில் சிறப்பு பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க நல்ல, கெட்ட தொடுதல், பாலியல் தொந்தரவுகள் குறித்து விவாதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்களிடம் ஏற்படும் நடவடிக்கை மாற்றங்களை கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருபாலர் பணிபுரியும் இடத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பள்ளியில் புகார் குழு ஏற்படுத்தி, விவாதிக்க வேண்டும்.

பெண் குழந்தைகளிடம் தன் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக்கு 14417, குழந்தை மைய எண் 1098, மகளிர் உதவி மைய எண் 181 ன் பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த உதவி எண்களை பள்ளி வளாகம், மக்கள் கூடும் இடம், குடியிருப்பு பகுதிகளில் காட்சிப்படுத்தவேண்டும். பள்ளியில் தலைமை ஆசிரியர் தலைமையில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு ஏற்படுத்தி, ஆலோசிக்க வேண்டும்.

மாணவர்களை சுகாதார துாதர்' களாக நியமித்து சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு அளிக்க வேண்டும். இந்த விஷயங்கள் குறித்து மார்ச் 26 அன்று பள்ளிகளில் சிறப்பு பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement