சகஸ்ர லிங்கார்ச்சனை சிறப்பு பூஜை

மந்தாரக்குப்பம், : வடக்கு வெள்ளுர் ஐயப்பன் கோவிலில் 1116 களிமண்ணால் ஆன சிவலிங்கம் வைத்து சகஸ்ர லிங்கார்ச்சனை சிறப்பு பூஜை நடந்தது.

உலக மக்களின் நலன் கருதியும், நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் நேற்று காலை 6:00 மணியளவில் கணபதி ேஹாமத்துடன் சிறப்பு பூஜை துவங்கியது. களிமண்ணால் ஆன 1116 சிவலிங்கம் செய்து வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

சிறப்பு பூஜையில் சிவனடியார்கள் லிங்காஷ்டகம், தேவாரம், திருவாசகம், பதிகங்கள் பாடினர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை சத்யநாராயணன், சுப்புலட்சுமி, மணிகண்டன், சாய்நாதன் செய்திருந்தனர்.

Advertisement