என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணம்

கடலுார் : என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் அலிம்கோ மூலம் 154 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பண்ருட்டி தாலுகாவிற்குட்பட்ட டேனிஷ் மிஷன் பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, என்.எல்.சி., தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி முன்னிலை வகித்தார்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு நிதியில் 154 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 240 உதவி உபகரணங்கள் 55 லட்சத்து 45 ஆயிரத்து 772 ரூபாய் மதிப்பீட்டில் அலிம்கோ மூலம் வழங்கினார்.
கடந்த 4 அண்டுகளில் 11 ஆயிரத்து 632 மாற்றுத்திறனாளிகளுக்கு 34.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, வேப்பங்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மதிப்பீட்டு குழுவால் முகாம் நடத்தப்பட்டது.
முகாம்களில் 421 மாற்றுத் திறனாளிகளுக்கு 632 உதவி உபகரணங்கள் 1.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அலிம்கோ நிறுவனத்தால் உதவி உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இவற்றில் வேப்பங்குறிச்சி மற்றும் குறிஞ்சிப்பாடி முகாம்களில் மதிப்பீடு செய்யப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் கூறுகையில், 'பண்ருட்டி பகுதியில் மதிப்பீட்டு குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, முடக்கு வாதம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடை உபகரணங்கள், செயற்கை கால் உள்ளிட்ட பல்வேறு வகையான 240 உதவி உபகரணங்களை 154 மாற்றுத் திறனாளிகளுக்கு 55 லட்சத்து 45 ஆயிரத்து 772 மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
நிகழ்ச்சியில் அலிம்கோ மேலாளர் குப்தா, என்.எல்.சி. செயல் இயக்குனர் மூர்த்தி, பொது மேலாளர் சீனிவாச பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
-
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்!
-
தடை செய்யப்பட்ட 67 அமைப்புகளின் பட்டியல்: வெளியிட்டது மத்திய அரசு!