புதிய கல்விக் கொள்கை வேண்டாம் அமைச்சர் பொன்முடி பேச்சு

விருத்தாசலம் : 'தமிழகத்திற்கு புதிய கல்விக் கொள்கை வேண்டாம்' என அமைச்சர் பொன்முடி பேசினார்.
மங்கலம்பேட்டையில், மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார்.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வடக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி, மங்கலம்பேட்டை பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலர் வேல்முருகன் வரவேற்றார்.
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, விருத்தாசலம் தொகுதி பொறுப்பாளர் சபா சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கணேஷ்குமார், வழக்கறிஞரணி மாவட்ட தலைவர் பாரி இப்ராஹிம், அவை தலைவர் முஹம்மது யூசுப், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மங்கலம்பேட்டை பேரூர் செயலர் செல்வம் நன்றி கூறினார்.
கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'நமது தாய்மொழியை கண்டிப்பாக படிக்க வேண்டும். அதேபோல் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்கிற நமது பிள்ளைகள் அங்குள்ள மக்களோடு பழகுவதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் படித்திருந்தால் நாம் எந்த நாட்டிற்கும் சென்று வர முடியும்.
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைபடுத்தினால், 8ம் வகுப்பைத் தாண்டி மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்படும். அதனால்தான் புதிய கல்விக் கொள்கை வேண்டாம் என்கிறோம்' என்றார்.

மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை