மது கடத்தலை தடுக்க எஸ்.பி., திடீர் சோதனை 

1

கடலுார் : கடலுார் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் மதுபாட்டில் கடத்தலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ஜெயக்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

புதுச்சேரி, மதுபாட்டில்கள் தமிழக பகுதிக்கு கடத்தி வருவதை தடுக்கும் பொருட்டு கடலுார் ஆல்பேட்டையில் சோதனை சாவடியில் நேற்று புதுச்சேரியில் இருந்து கடலுார் வந்த வாகனங்களை எஸ்.பி., ஜெயக்குமார் சோதனை செய்தார்.

அப்போது, சில வாகனங்களில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டார்.

Advertisement