திருச்செந்துார் கோவிலில் மூச்சு திணறி பக்தர் பலி

2

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று விடுமுறை தினம் என்பதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொது தரிசன வரிசையில், 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், காரைக்குடியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி ஓம்குமார், 49, குடும்பத்தினருடன், 100 ரூபாய் கட்டண வரிசையில் காத்திருந்த நிலையில், திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவர், 108 ஆம்புலன்சில் திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

Advertisement