'ஒரு மொழி கொள்கையை அமல்படுத்த தயாரா'

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:

தி.மு.க., அமைச்சர்கள், நிர்வாகிகளின் குழந்தைகளை, மும்மொழி நடத்தும் பள்ளியில் படிக்க வைத்துவிட்டு, மாநகராட்சியில் படிக்கும் ஏழை மக்களை மும்மொழி கற்கக்கூடாது என்று சொல்வது நியாயமில்லை. ஒரு மொழி கொள்கையை பின்பற்றி, ஜப்பான் போன்ற நாடுகள் முன்னேறி வருகின்றன. வளர்ச்சிக்கு அறிவு தான் முக்கியம். எனவே, மும்மொழி கொள்கை வேண்டாம் என்றால், தமிழகத்தில் ஒரு மொழி கொள்கையை அமல்படுத்த தயாரா.

டாஸ்மாக்கில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது தொடர்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கவர்னரை சந்தித்து, வழக்கு தொடர அனுமதி கேட்டோம். தமிழகத்தில் கனிமவள கொள்ளை உச்சத்தில் உள்ளது.

இவ்வாறு கூறினார்.

Advertisement