விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!

புதுடில்லி: சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஆண்டு சம்பளம் ரூ .1.08 கோடி முதல் ரூ .1.41 கோடி வரை இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் நாசா எனப்படும் விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில், கடந்தாண்டு ஜூன் மாதம், 5ம் தேதி, இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பயணமானார். அவருடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக சிக்கி கொண்டனர்.
இந்நிலையில், நாளை 9 மாதங்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்கள் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப உள்ளனர். இறுதிகட்ட ஏற்பாடுகள் நாளை காலை 8.15 மணி முதல் துவங்கும் என நாசா தெரிவித்துள்ளது. தற்போது அவர்களை பூமிக்கு அழைத்து செல்ல, எலான் மஸ்கிற்கு சொந்தமான நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட்டில் விண்வெளி வீரர்கள் 4 பேர் சென்றுள்ளனர்.
விண்வெளி நிலையத்தில் பூமி திரும்புவதற்கு ஏற்பாடு செய்த எலான் மஸ்க், அதிபர் டிரம்பிற்கு நன்றி என நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 'மிக விரைவில் நாங்கள் திரும்பி வருவோம்' என்று கூறினார். புட்ச் வில்மோர் கூறியதாவது: நம் அனைவருக்கும் எலான் மஸ்க் மீது மிகுந்த மரியாதை உள்ளது, மேலும் நமது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கை உள்ளது, என்றார்.
சம்பளம் எவ்வளவு?
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மத்திய அரசு ஊழியர்கள். எனவே அவர்களின் ஆண்டு சம்பளம் ரூ .1.08 கோடி முதல் ரூ .1.41 கோடி வரை இருக்கும் என அமெரிக்க மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதுமட்டுமின்றி, விண்வெளியில் 287 நாட்கள் தங்குவதற்கு தலா 1,148 டாலர் (சுமார் ரூ .1 லட்சம்) கூடுதல் தொகையைப் பெறுவார்கள்.










மேலும்
-
உண்மையான அக்கறை எனில் டாஸ்மாக் முறைகேட்டில் நடவடிக்கை அவசியம்; த.வெ.க., வலியுறுத்தல்
-
என்னை வழிநடத்திய பகவத் கீதை: துளசி கப்பார்ட் நெகிழ்ச்சி
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்