'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க உத்தரவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும், மூன்றாவது புதன்கிழமைகளில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் வாயிலாக, ஒவ்வொரு தாலுகாவிலும், கலெக்டர் கலைச்செல்வி தங்கி ஆய்வு நடத்தி வருகிறார்.
மார்ச் மாதத்திற்கான, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமிற்கு, காஞ்சிபுரம் தாலுகா தேர்வு செய்யப்பட்டது. இம்மாதம் 19ம் தேதியன்று ஆய்வு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்ற ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் காலாண்டர் தெருவில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்திலும், சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளியிலும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு செய்தார்.
வேகவதி ஆற்றில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தை பார்வையிட்ட அவர், பணிகளை வேகமாக முடிக்க, கமிஷனர் நவேந்திரனிடம் அறிவுறுத்தினார்.
மேலும்
-
நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது
-
கேள்விகளும், பதில்களும் சுருக்கமாக இருக்கணும்; அப்பாவு 'அட்வைஸ்'
-
மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்புக்கு மறுப்பு: ஐகோர்ட் கண்டிப்பு
-
5937 ஏக்கரில் புதிய சதுப்பு நிலக்காடுகள்; தமிழகத்தில் உருவாக்கம்!
-
கேரளாவில் பா.ஜ., நிர்வாகி சுட்டுக்கொலை; ஒருவர் கைது
-
இந்தியாவுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிய ராகுல்; சம்மன் அனுப்பியது சம்பல் கோர்ட்