நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

9


சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மார்ச் 19) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

நேற்றைய போக்சோ




ஆசிரியர் சிக்கினார்

கிருஷ்ணகிரி அருகே, தனியார் மெட் ரிக் மேல்நிலைப் பள்ளி யில் பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவிக்கு அஞ் சூர் - ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப் பட்டிருந்தது.

நேற்று முன்தினம் தேர்வெழுத சென்ற மாணவியிடம், தேர்வு மைய மேற்பார்வையாளராக இருந்த வேப்பன ஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் ரமேஷ், 41, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், பர்கூர் அனைத்து மகளிர் போலீ சில் அளித்த புகாரின் படி, ஆசிரியரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

சலுான்காரருக்கு 'கம்பி'





ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த தென்மாம்பாக்கத்தை சேர்ந்தவர் குமார், 44 சலூன் கடை உரிமையாளர். திரும ணமாகாத அவர், 10ம் வகுப்பு படிக்கும் மாண வியிடம், தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்தார். தகவலறிந்த மாணவியின் பெற்றோர் புகாரின்படி நெமிலி போலீசார், குமாரை, போக்சோவில் கைது செய்தனர்.

தந்தை கைது



தஞ்சாவூர் மாவட்டம், ஒத்தநாடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 47 வயது கூலி தொழிலாளி, மனைவியை பிரிந்து 13 வயது மகளுடன் தனியாக வசித்தார். இந்நி லையில், இரவு நேரங்களில் கூலி தொழிலாளி தன் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மாலை, அந்த சிறுமி பள்ளியில் மயக்கமடைந்தார். ஆசிரியர் அவசிடம் விசாரித்த போது, தன் தந்தை பாலி யல் தொல்லை அளித்ததாக கூறி, சிறுமி கதறி அழுதார். புகாரின்படி, ஓரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில், சிறு மியின் தந்தையை நேற்று கைது செய்தனர்.

Advertisement