தெருநாயால் உயிரிழக்கும் கால்நடைகள்; பா.ஜ., கோரிக்கை

தமிழக பாஜ மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் கூறியிருப்பதாவது:
தெருநாய்களால் கடித்துக்குதறப்பட்ட திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 700-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டுமென்று விவசாயிகளோடு கடந்த மாதம் சாலைமறியலில் ஈடுபட்டது .
பாஜக.போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அமைச்சர் முத்துசாமி பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு பெற்றுத்தரப்படும் என அமைச்சர் முத்துச்சாமி உறுதியளித்தார்.அதன்படி தெருநாய்களால் கடிபட்டு இறந்த ஆடு ஒன்றுக்கு ரூ.6000-ம்,கோழி ஒன்றுக்கு ரூ.200-ம் இழப்பீடு வழங்கப்படும் என்று விரைவில் அரசாணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் முத்துச்சாமிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் விவசாயிகள் சார்பில் பாஜக தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது. அதேசமயம் தாங்கள் பாடுபட்டு வளர்த்த ஆடு தெருநாய்களால் கடிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழப்பதும்,அதனால் தங்கள் வாழ்வாதாரமாகவுள்ள வருமானம் பறிபோவதும் விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.தெருநாய்களின் கருத்தடைக்கு ரூ.1000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கியும் தெருநாய்கள் குறைந்த பாடில்லை. கணக்கற்ற நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் ரேபிஸ் உள்ளிட்ட நோய்களால் உயிரிழப்பதும் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே நாய்களை கட்டுப்படுத்த நீதிமன்றங்கள் மூலமாக நிரந்தரத்தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அறிவிக்கப்பட்ட நிதி தடையின்றி விரைவாக விவசாயிகளைச் சென்றடைய மாவட்ட ஆட்சியர் செயல்பட வேண்டும். ஆடு,கோழி திருட்டும் அதிகரித்து வருவது காவல்துறை உதவியோடு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளாறார்.
மேலும்
-
'சிசிடிவி' கேமராவை உடைத்த இருவர் கைது
-
கிராம பகுதிகளில் தனியாக வசிக்கும் முதியவர்கள் குறித்து கணக்கெடுப்பு
-
எதிர் திசையில் வாகன ஓட்டிகள் பயணம் சிங்கபெருமாள்கோவில் மேம்பாலத்தில் பீதி
-
மீன் கடைகளில்அதிகாரிகள் ஆய்வு
-
சுகாதார நிலையம் முன்புறம் தடுப்புகள் அமைக்க வேண்டும்
-
விபத்தில் சிக்கிய அரசு பஸ் 20 பயணியர் தப்பினர்