சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 30 பேர் சுட்டுக்கொலை!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 30 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜாப்பூர் - தந்தேவாடா எல்லையில், வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் நக்சலைட்டுகள் 30 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்தார். இது குறித்து பிஜாப்பூர் எஸ்.பி., ஜிதேந்திர குமார் யாதவ் கூறியதாவது: இன்று பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருந்தவர்கள். அதுமட்டுமின்றி பிஜாப்பூர் மாவட்டத்தில் 3 வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
உடைந்தது பாதாள சாக்கடை குழாய் தார் ரோட்டில் உருவானது பள்ளம்
-
கொடைக்கானல் வில்பட்டியில் மரங்கள் வெட்டி கடத்தல்: கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அரசுக்கு வருவாய் இழப்பு
-
பல்லாங்குழி சாலை கிராமத்தினர் தவிப்பு
-
கொளுத்தும் வெயிலால் வறண்டு வரும் குளங்கள் மெல்லிய நீரோடை ஆகும் நொய்யல்
-
சோற்றில் கை வைக்கிறாங்க! ரேஷன் அரிசி கடத்தல் தீவிரம்: 3 மாதத்தில் 400 சதவீதம் அதிகம்
-
நீரின்றி அமையாது உலகு நாளை உலக தண்ணீர் தினம் போட்டிகளில் பங்கேற்க வேளாண் பல்கலை அழைப்பு