எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார்; துரைமுருகன் மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்!

சென்னை: 'தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார்' என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பை ஏற்று, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க., கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்' என, அக்கட்சியினருக்கு பொதுச்செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தேனியில் நடந்த கட்சி கூட்டத்தில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் பேசியதாவது:
மேல்முறையீடு
துரைமுருகனின் இந்த அறிவிப்பு, எங்களை போன்றவர்களை பெரிய இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறது. குறைந்தபட்சம் அரசியல் கட்சிகளுக்கு எதிரான இந்த தீர்ப்பு சம்பந்தமாக, மாநில அரசே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கலாம்.
மேல்முறையீடு செய்யவில்லை. குறைந்தபட்சம் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை அழைத்து, உயர்நீதிமன்றத்தில் இப்படி உத்தரவு வந்து இருக்கிறது என்ன செய்யலாம். இதை ஏற்பதா? நிராகரிப்பதா? அல்லது மாற்றுவழி என்ன? என்பது குறித்து கலந்து ஆலோசித்து இருக்கலாம்.
இப்படி எந்த அணுகுமுறையும் மேற்கொள்ளாமல், தன்னிச்சையாக, நாங்களே கொடிகளை எல்லாம் அகற்றி கொள்கிறோம் என கூறியுள்ளார். அந்த உத்தரவில் என்ன இருக்கிறது என்றால், 12 வாரங்களுக்குள் கொடிக்கம்பங்களை அகற்றவில்லை என்றால் போலீசாரே அகற்றிவிட்டு, அதற்கான கட்டணத்தை கட்சியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
என்ன காண்டு?
இந்த அரசியல் கட்சிகள் மேல், நீதிபதிகளுக்கு எல்லாம் என்ன காண்டு என்று தெரியவில்லை. சமீப காலமாக ரொம்ப மோசமாக எல்லை மீறி போய் கொண்டு இருக்கிறார்கள். நான் கேட்பது, சமீப காலமாக தி.மு.க.,வுக்கு இது சொந்த பிரச்னையா? தி.மு.க.,விற்கு மட்டுமான பிரச்னையா இது, குறைந்தபட்சம் கலந்து பேச வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா? எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.
10 என்றால் 150!
எங்களுக்கு 10 கொடிகம்பங்கள் இருக்கு என்றால், உங்களுக்கு 150 கொடிகம்பங்கள் இருக்கிறது. அரசியல் கட்சி என்றால் அதற்கு என்று கொடி, இது எல்லாம் ஏற்கனவே சட்டத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் விஷயம். போக்குவரத்திற்கு இடையூறாக இருக்க கூடாது என்று சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
நக்கல், நையாண்டி
போக்குவரத்திற்கு இடையூறாக யாராவது ஒரு கொடிகம்பத்தை ஏற்றுகிறார்கள், நடுகிறார்கள் என்று சொல்லுங்கள் அதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. துரைமுருகன், 'நான் எனது கட்சி காரர்களுக்கு சொல்கிறேன், நீ ஏன்யா கேள்வி கேட்கிற' என்று சொல்லலாம். என்னை பார்க்கும் போது கேட்கலாம். அவரு அந்த மாதிரி எல்லாம் கொஞ்சம் நக்கல், நையாண்டி எல்லாம் பேசுகிற தலைவர் தான். இவ்வாறு அவர் கூறினார்.










மேலும்
-
புது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தாசரி குன்னத்துார்வாசிகள் கோரிக்கை
-
கஞ்சா செடி பயிரிட்டவர்மீது போலீசார் வழக்கு
-
இடையகோட்டைக்கு மினி பஸ்இயக்க மக்கள் வேண்டுகோள்
-
ஸ்ரீவி., நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் சாட்சியம்
-
உலக சிட்டுக்குருவிகள் தினம்
-
வறண்ட ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுப்பு! கிராம ஊராட்சிகளில் வறட்சி போக்க நடவடிக்கை