பார்களில் பெண்களுக்கு வேலை; சட்டதிருத்தத்தை கொண்டு வந்தது மே.வங்க அரசு

2

கோல்கட்டா: பார்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கும் வகையிலான சட்டத்திருத்தத்தை மேற்கு வங்க அரசு சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது.


சட்டசபையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சாரியா நேற்று இந்த சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த சட்டத்திருத்த மசோதா பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.


மேற்கு வங்கத்தில் மது விற்பனை செய்யும் கடைகள், மது அருந்தும் வசதி கொண்ட பார்களுடன் கூடிய கடைகள் என இரு வகையான மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில், பார் வசதி இருக்கும் கடைகளில் பெண்கள் பணிபுரிய அனுமதிக்கும் வகையில் இந்த சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து சந்திரிமா பட்டாச்சாரியா கூறுகையில், "ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு மீது அரசுக்கு நம்பிக்கை இல்லை. மசோதாவில் உள்ள பிற விதிகள், சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதைத் தடுக்கவும், மூலப் பொருட்களின் விநியோகத்தை கண்காணிக்கவும், மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது," என்று அவர் கூறினார்.

Advertisement